அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான தலைமை மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கான தெரிவு நாளை சனிக்கிழமை (30) வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
உலமா சபையின் மத்திய குழு அங்கத்தவர்கள் 106 பேரும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 30 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழுவைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
தெரிவாகும் 30 பேர்களில் இருந்து நிர்வாகத்துக்கான 11 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மூன்று வருட கால ஆயுளைக் கொண்ட சபையில் தலைவர் 3 தடவை மட்டுமே பதவியில் இருக்கும் விதமாக உலமா சபையின் யாப்பு திருத்தப்பட்டுள்ள நிலையிலேயே இம்முறைய தெரிவு நடைபெறுகின்றது.
64 வயதான அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி கடந்த 21 வருடங்களாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவராக இருந்து வருகிறார்.