விளக்கமறியலில் இருந்த தேசபந்து பிணையில் விடுவிப்பு

Date:

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபர் தேசபந்து தென்னகோனை தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதி வழங்கிய நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என சந்தேகநபருக்கு மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

2022 மே 9 அன்று கொழும்பு, காலி முகத்திடலில் ‘அரகலய’ போராட்ட இயக்கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகஸ்ட் 20 அன்று அவரது இல்லத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...