கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார மகா தேவி பூங்காவிலிருந்து யூனியன் பிளேஸில் உள்ள ஹைட் பூங்கா வரை மாபெரும் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெறவுள்ளது.
பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், நாட்டின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அரசியல் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் இந்த பேரணி கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி, பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு , பாகிஸ்தான், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய ஆறு ஆசிய நாடுகளில் ஒரே நேரத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த பிராந்திய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவால் ஆதரிக்கப்படும் இந்த முயற்சி, மலேசியா தலைமையிலான உலகளாவிய ஒற்றுமை பிரச்சாரத்திற்கான உத்வேகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலேசியாவின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் ஆதரவின் கீழ், காசா மீதான முற்றுகையை முறியடிக்க செப்டம்பர் தொடக்கத்தில் மத்தியதரைக் கடல் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட கப்பல்களை அனுப்புவதில் 45க்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கவுள்ளது.