எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக மனிதநேய தினம், மக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் பெறுமானங்களை வெளிக்கொண்டுவருவதற்கும், பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எடுத்துரைப்பதற்கும் ஒரு முக்கியமான சர்வதேச மைல்கல்லாக அமைகிறது.
இந்த நிகழ்வின் போது, சவூதி அரேபியா மனிதநேயப்பணியில் தன்னை முன்னணி மாதிரியாக உலகளாவிய மட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இது அதன் மதக் கொள்கைகளிலும் ஆழமாக வேரூன்றிய பெறுமானங்களிலும் இருந்து உருவாகிறது, அவை மனிதனை வளர்ச்சியின் மையமாகவும் அமைதியின் இலக்காகவும் ஆக்குகின்றன.
இரண்டு புனிஸ்த்தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் சவூத் அவர்கள் சவூதி அரேபியாவின் வளர்ச்சிக் கொள்கை மனிதனை மையமாகக் கொண்ட ஒரு விரிவான மற்றும் நிலையான மறுமலர்ச்சியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்ற கொள்கையை நிறுவினார்.
அதே வேளையில், பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான கெளரவ இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அவர்கள், மனித வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியும் அமைதியின் அடித்தளமும் என்று வலியுறுத்தினார்.
இந்த அறிவார்ந்த தலைமைத்துவ பார்வை, சவூதி அரேபிய இராச்சியத்தை உலகின் மிகப்பெரிய நன்கொடை அளிக்கும் நாடுகளில் உயர் நிலையை அடைந்துகொள்ள வழிவகுத்தது.
கடந்த பல தசாப்தங்களாக, சவூதி அரேபிய இராச்சியம் அதன் மனிதநேய நிறுவனங்கள் வழியாக, குறிப்பாக மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதநேய வேலைகள் மையத்தினூடாக, 530 பில்லியன் சவூதி ரியால்களுக்கும் மேற்பட்ட மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.
மேலும், உலகம் முழுவதிலும் 173 நாடுகளில் 7983 க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளது, இதில் அபிவிருத்தி , நிவாரணம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட 47 வேறுபட்ட துறைகள் அடங்கும்.
ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவதில் முக்கிய கருவியாக மாறிய மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதநேய வேலைகள் மையம் நிறுவப்பட்டதில் இருந்து, அம்மையம் ஐக்கிய நாடுகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது.
இந்த முயற்சிகள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைக் குறைப்பதில் பங்களித்துள்ளன, இதில் பல நாடுகளில் ஏற்பட்ட பெரிய மனிதநேய நெருக்கடிகளும் உள்ளடங்கும்.
உலக மனிதநேய தினத்தை, சவூதி அரேபிய இராச்சியம் கொண்டாடுவது அதன் மனிதநேயப் பொறுப்புகளுக்கான நிரந்தர அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதோடு சர்வதேச அரங்கில் அதன் முன்னணி பாத்திரத்தை தொடர்வதற்கான உறுதிப்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது.
சவூதி அரேபிய இராச்சியம் மனிதநேயப் பணியை இரண்டாம் பட்சமாகப் பார்க்கவில்லை, மாறாக அதை ஒரு நிலையான அணுகுமுறையாகவும் அதன் வெளியுறவுக் கொள்கையின் உண்மையான பண்பாகவும் கருதுகிறது, மேலும் முழு மனிதகுலத்தின் மீதான உண்மையான அக்கறையுடன் நிறைவேற்றும் ஒரு உயர்ந்த பணியாகக் கருதுகிறது.
சவூதி அரேபியா இராச்சியம் அதன் ஆழ வேரூன்றிய பெறுமானங்கள் மற்றும் இலட்சிய நோக்கை அடிப்படையாகக் கொண்டு தனது தொடர்ச்சியான அறிவார்ந்த பங்களிப்பில் தொடர்ந்து முன்னேறுகின்ற , மனிதனுக்கு முன்னுரிமை அளிக்கின்ற நாடுகளின்பட்டியலில் தொடர்ந்தும் முன்னணியில் திகழும் என்பதில் சந்தேகமில்லை.