உலமா சபையின் புதிய நிர்வாகத்தின் கவனத்திற்கு: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீலின் ஆலோசனைகள்

Date:

இலங்கையில் உள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்பாக விளங்கும் உலமா சபையின் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெறுகிறது.

இந்நிலையில்,  ஜாமிஆ நளீமிய்யாவின் இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதி அஷ்ஷைக் S.H.M. பளீல் (நளீமி) அவர்கள் முன்வைத்துள்ள உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுவிற்கான பொறுப்புக்கள்:

1. முஸ்லிம் விவாக – விவாகரத்து தொடர்பாக வருடக் கணக்கில் தீர்வு காணப்படாதிருக்கும் சர்ச்சைக்கு தீர்வாக ஒருமித்த ஆவணத்தை தயாரிப்பது

2. சுங்கத் திணைக்களத்தில் விடுவிக்கப்படாமலிருக்கும் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகள் தொடர்பாக தீர்க்கமான முடிவுக்கு வருவது

3. சிலரால் எழுதப்பட்ட இஸ்லாமிய நூல்கள் உள்நாட்டுக்கு வரக்கூடாது என்று அரசாங்கத்தைக் கோரும் கடிதமொன்றை ஜம்இய்யாவில் அங்கம் வகிக்கும் சிலர் உட்பட எட்டுப் பேர் கையொப்பமிட்டு அரசாங்கத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள்.அது முஸ்லிம்களுக்கு மத்தியில் சர்ச்சையாக இருப்பதால் அது விடயமாக தீர்க்கமான முடிவுக்கு வருவது.

4. அரபு மத்ரஸாக்களுக்காகான ஒருமித்த பாட விதானம் ஒன்றுக்கான முன்மொழிவுகளை ஏற்கனவே நிபுணர்கள் குழுவொன்று முன்வைத்துள்ளது.அக்குழுவின் பணிகள் தொடரவில்லை.எனவே அதனை தொடர்வதற்கான முயற்சிகளைச் செய்வது.

இவை பணிவான வேண்டுகோள்கள். புதிய நிர்வாகம் தமது பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்று அல்லாஹுத்தஆலாவை பிரார்த்திக்கின்றோம்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...