சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்காக நடமாடும் சேவை!

Date:

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஹாயில் பிராந்தியத்திற்கான நடமாடும் சேவை இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 29ஆம் திகதியன்று காலை 10:30 முதல் மாலை 4:30 வரை CITY FLOWER HYPER MARKET BUILDING, AL MAHATTAH, HAIL, 2 ஆவது  மாடியில் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் SLBFE  பதிவு/பதிவை புதுப்பித்தல் தொழில் உத்தரவு பத்திரங்களை உறுதிப்படுத்துதல் (Job Order Attestation), தொழில் ஒப்பந்த ஆவணங்களை உறுதிப்படுத்துதல் – Self Agreement Attestation (தனிப்பட்ட முறையில் தொழிலை பெற்றுக் கொண்டவர்களுக்காக), 10 நலன்புரி மற்றும் காப்பீடு தொடர்பான சேவைகள், SLBFE  வழங்கும் சேவைகள் குறித்த விழிப்புணர்வு, வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த முறைப்பாடுகள், சம்பளம் பற்றிய பிரச்சனைகள் /முறைப்பாடுகள், இலங்கைக்கு மீள அனுப்புவதற்கான உதவிகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.

கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்

உங்களது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) /கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பிரதி/இலங்கை தேசிய அடையாள அட்டை இலக்கம்.

உங்கள் இகாமா (வதிவிட அனுமதி அட்டை).

இலங்கைத் தூதரகம் ஹாயில் பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் இந்த பெறுமதி மிக்க வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...