கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி அரேபிய நீதி மற்றும் புள்ளிவிபரங்களுக்கான அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி ஒரு நாளில் 157 பேர் அல்லது ஒன்பது நிமிடத்துக்கு ஒருவர் சவூதி அரேபியாவில் விவாகரத்துப் பெறுகின்றனர்.
கடந்த ஒரு வருடத்தில் திருமணமானவர்களில் 12.6 வீதமானவர்கள் விவாகரத்து செய்துள்ளனர். கடந்த வருடம் விவகாரத்துச் செய்தவர்களில் 65 வீதமானவர்கள் திருமணம் முடித்து ஒரு வருடத்துக்குள்ளேயே விவகார்த்துப் பெற்றுள்ளனர்.
அதிகமான விவாகரத்துகள் அல் பஹா பிரதேசத்தில் பதிவாகியுள்ளன. அல் பஹாவில் 36 வீதமும் ரியாதில் 21,7 வீதமும் ஹைலில் 19.2 வீதமுமென உச்ச பட்ச விவாகரத்து பதிவாகியுள்ளது.
திருமணத்தை புனிதமானதாக நோக்குவது குறைந்திருப்பது, அதிகப்படியான திருமணச் செலவுகள், மேலோட்டமாக அல்லது அவசரத்தில் துணையைத் தேர்ந்தெடுப்பது, குடும்பங்களின் அதிகப்படியான தலையீடு எனப் பல காரணங்கள் இதில் தாக்கம் செலுத்துவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.