பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாஸித் நேற்றைய தினம் (07) ஜனாதிபதி அநுர குமார திஸானாயக்க அவர்களை பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, ஜனாதிபதியினால் அருகம்பே பிரதேசத்திற்கு வருகைதரக் கூடிய சுற்றுலா பயணிகள் தொடர்பாகவும், இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் தொடர்பாகவும் வினவப்பட்ட கேள்விகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதிலளித்திருந்தார்.
அவர் பதிலளிக்கையில், இஸ்ரேல் உல்லாச பயனிகளின் வணக்கஸ்தலமான சபாத் பற்றியும், அவர்கள் சுற்றுலா பயணிகளிலாக வந்து சுற்றுலா தொழிலில் ஈடுபட்டிருப்பதையும் மற்றும் அவர்களுக்கு மக்களினுடைய எதிர்ப்பினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த பிரதேசத்தில் வாழும் மக்களின் சமாதானத்திற்கு, கலாச்சாரத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் உல்லாச பயணிகளுடைய வருகை இடம்பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அது மட்டுமின்றி, பொத்துவிலிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களை நேரில் சந்திப்பதற்கான திகதியொன்றினையும் பாராளுமன்ற உறுப்பினர் வினவியுள்ளதுடன் மிக விரைவில் குறித்த சந்திப்பு இடம்பெறும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் இந்த நாட்டினை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.