தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய ‘செம்மணி’ எனும் தலைப்பிலான நூல் வெளியீடும் ‘இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் மனித புதை குழிகள்’ தொடர்பான கலந்துரையாடலும் இன்று வியாழக்கிழமை பி.ப.2.30 மணிக்கு தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில் ‘இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் மனித புதைக்குழிகள் தொடர்பான கலந்துரையாடலை ருகி பெர்ணான்டோ நெறிப்படுத்தவுள்ளார்.
அத்தோடு சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா, பிரிட்டோ பெர்ணான்டோ ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஊடகவிய லாளர் சகுண எம்.கமகே மற்றும் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்வினை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.