முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியங்கள் நீக்கப்படாது:சட்டமா அதிபர்

Date:

ஜனாதிபதி உரித்துரிமைகள் தொடர்பாக முன்மொழியப்பட்ட பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை நீக்க முயலவில்லை என்றும் மாறாக 1986 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்துரிமைகள் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கு வழங்கப்படும் மேலதிக சலுகைகளைக் குறைப்பதே சட்டமூலத்தின் நோக்கம் என்றும் சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட ஜனாதிபதி உரித்துரிமைகள் (ரத்துசெய்தல்) பிரேரணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஏழு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்ட மாஅதிபர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இதனை குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்கள் அச்சலா வெங்கப்புலி மற்றும் சம்பத் அபயகோன் ஆகியோர் கொண்ட அமர்வில், இந்த மனுக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முப்பெரும் நினைவுப் பேருரைகள் செப்.2 இல் கொழும்பில்..!

அல்-அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் ஏற்பாடு செய்யும் முப்பெரும் நினைவுப்பேருரைகள் வைபவம்...

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான சிறப்புப் பொருள்...

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக்கணக்குகளுக்கு..!

70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று...

குளியாப்பிட்டிய விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

குளியாப்பிட்டிய பகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர்...