முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த வகையில் இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைய, வாக்குமூலம் பெறுவதற்காக ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு பயணம் செய்த வேளையில், அரச நிதி பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது
முன்னதாக இது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து CID வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.