அனுராதபுரம் – ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், தமது மனைவி புதையல் தோண்டியமை தொடர்பாக ,கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதி பொலிஸ் மா அதிபர் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு சென்றமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமையும், தொலைபேசி ஆய்வுகள், பாதுகாப்பு கெமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, குறித்த கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி மற்றும் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.