தாம் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றதும் பொய்யானது என மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஆளுநர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,
ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையில் தான் உறுதியாக இருப்பதாகவும் ‘நமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக,இடைவிடாது, தளராது பணியாற்றி வருகிறேன்,” எனக் குறிப்பிட்டார்.
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியமை குறிப்பிடத்தக்கது.