காசாவில் தொடர்ந்தும் நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களில் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட குறைந்தது 19 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இத்தாக்குதலில் மொஹம்மட் அல் சலாமா எனும் அல் ஜஸீரா தொலைக்காட்சி ஊடகவியலாளர், ஹொஸ்ஸாம் அல் மஸ்ரி எனும் ரொய்ட்டர்ஸ் புகைப்பட ஊடகவியலாளர், AP உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்காக பணியாற்றிய மரியம் அபு தகா, NBC வலையமைப்பிற்காக பணியாற்றிய மொஆஸ் அபூ தாஹா ஆகிய நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
காசா நகரின் வடபகுதிகளில் அமைந்துள்ள வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த விமானத் தாக்குதல்களின்போது குடியிருப்பு பகுதிகளும் சேதமடைந்துள்ளன. இதன் போது அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அல் ஜஸீரா ஊடகவியலாளர் உள்ளிட்ட 4 பேர் இதில் பலியாகியுள்ளதாக, அந்நாட்டு அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் பலர் காயமடைந்ததாகவும், பல குடியிருப்பாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகவியலாளர்களின் உயிர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சர்வதேச ஊடக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், காசாவில் பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் சர்வதேச சமூகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதேவேளை, கான் யூனிஸில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையும் இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கானதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.