அமைச்சரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

Date:

5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்றப்போவதில்லை என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், கட்டாய கைரேகை மற்றும் கூடுதல் நேர வேலைநிறுத்தம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், முறையான ஒப்புதல் இன்றி பணிக்கு சமூகமளிக்காத அஞ்சல் அதிகாரிகளின் சம்பளம் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு, சுகவீனம் விடுமுறை என்றால் அரச மருத்துவ சான்றிதழ்களைச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, தபால்  ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக சுமார் 100 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் ஊழியர்கள் 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17ஆம் திகதி நள்ளிரவில் தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மே 9 கலவரம்: இம்ரான் கானுக்கு பிணை வழங்கிய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்...

மேல் மாகாணத்தில் 5 பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிப்பு!

இலங்கையின் மேல் மாகாணத்தில் நீரிழிவு நோயால் ஐந்து பேரில் ஒருவர் பாதிக்கப்படுவதாக...

எதிர்வரும் நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் மாலையில் மழை

எதிர்வரும் நாட்களில் நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில்...

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...