பஹ்ரைன் நாட்டுக்கான இஸ்ரேலின் புதிய தூதுவராக சாமுவேல் ரபல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன ஆவணங்களை அவர் பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடம் கையளித்தார்.
இதேவேளையில், பிரேசில் தனது நாட்டிலுள்ள இஸ்ரேல் தூதுவரை வெளியேற்றியுள்ள நிலையில், ஒல்லாந்து அரசின் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா, சுவீடன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில், முஸ்லிம் நாடான பஹ்ரைனில் இஸ்ரேல் தூதுவரின் நியமனம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.