நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்பு சபை இன்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது.
புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த வாரம் கூடிய அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.