புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு செப்டம்பரில் நிறைவு!

Date:

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என அக்  குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று (27) பிற்பகல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சில் கூடிய போதே, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தற்போது சட்டமூலத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் இரண்டாவது முறையாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தலைவர் கூறினார்.

நாட்டில் அமுலாகியுள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்து, புதிய சட்டமூலத்தை வரைவதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது, நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களுக்கு முகம் கொடுப்பது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தனிநபர்களின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...