புத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் செனவிக்கும் புத்தளம் House of Religion அமைப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்

Date:

புத்தளம் House of Religion அமைப்பினர் இன்று (25) புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவிரத்னவை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தனர்.

சந்திப்பின்போது, புத்தளம் மாவட்ட House of Religion அமைப்பு மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடினர். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பணிகளுக்கான அமைச்சரவை ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் கோரினர். இதற்கான மகஜரும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

குறிப்பாக, புத்தளத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ள “House of Religion” திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அரசின் முழுமையான ஒத்துழைப்பை பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

இச்சந்திப்பில், புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி சுவிஸ் நாட்டின் பௌத்த விகாரையின் மதகுரு அனுருத்த தேரர், சுந்தரராம குருக்கள், அருட்தந்தை கெனடி, அஷ்ஷெய்க் எம். எஸ். அப்துல் முஜீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...