இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள் மகள் சாம் குறித்து எழுதிய உணர்ச்சி பூர்வமான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
படுகொலை செய்யப்பட்ட தியாகி அனஸ் ஷரீபின் மனைவி சின்னஞ்சிறு சாம் குறித்து இப்படி எழுதுகிறார்.
மகள் சாம் எப்போதுமே தந்தை அனஸுடனேயே இருப்பாள். செய்தித் தயாரிப்பு நடக்கும் சமயங்களிலும் கூட தன் தந்தையை அங்குமிங்கும் தேடுவாள்.
ரேடியோவில் தந்தையின் குரல் வரும் போது அப்போது தான் முதற் தடவையாக கேட்பது போன்று கேட்பாள்.
தனது தந்தையின் மரணத்தின் பின் அவரின் பணியை சாம் நிறைவேற்றும் ஒரு நாள் வரும். அப்போது அவரின் அடிச்சுவட்டை தொடரும் குரலாக சாம் மாறுவாள் ”