தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

Date:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தினை மையமாக வைத்து நடைபெறவுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழா தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பிரதியமைச்சர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (11) நடைபெற்றது.

மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளையும் உள்வாங்கி தேசிய மீலாத் விழா போட்டிகள் நடாத்தப்பட்டு வருவதோடு பதிவுசெய்யப்பட்ட 18 பள்ளிவாயல்கள் அபிவிருத்திக்கென அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டு பத்து மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு நூலாக தொகுக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள புராதன இடமான தர்ம கபீர் பள்ளிவாயலின் புகைப்படம் நினைவு முத்திரையாக வெளியிடப்படவுள்ளது.

இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் அம்பலாந்தோட்டை மெலே கொலணி போலானை கிராமத்தில் உள்ள மஸ்ஜிதுல் அரூஸியா பள்ளிவாயல் மைதானத்தில் சமய கலை கலாச்சார அம்சங்களுடன் நடைபெறவுள்ளதோடு இவைகளின் ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.

இதில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி, பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ், மாவட்ட செயலாளர், மாவட்ட மேலதிக உதவிச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம். எஸ்.எம். நவாஸ், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூர்ஆமித், அதிகாரிகள், பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் மற்றும் நலன் விரும்பிகள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

Popular

More like this
Related

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...

பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...