மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று (06) காலை 11.45 மணியளவில் வீடமைக்க தளம் வெட்டி கொண்டிருந்த வேளையில் திடீரென மண் மேடு சரிந்ததால் 6 பேர் புதையுண்டனர்.
சம்பவத்தையடுத்து மஸ்கெலியா பிரதேச சபை பணியாளர்களுடன் பிரதேசவாசிகள் புதையுண்ட 6 பேரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சரிந்த மண் மேடு அகற்றப்பட்டு 6 பேரும் அம்பியூலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் யதுர்ஷன் (28), யோகேஸ்வரன் (45), ராஜேஸ்வரன் (38), விஜயலிங்கம் (45), விஜயகுமார் (43), ஆறுமுகம் (45) ஆகிய 6 பேரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியிருந்தனர்.
மஸ்கெலியா பொலிஸார், ராணி தோட்ட தொழிலாளர்கள் இணைந்து இவர்களது உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்திருந்தனர்.
மஸ்கெலியா பிரதேச சபை முதல்வர், சபையின் உப தலைவர், உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.