ராஜிதவின் மனு அடுத்த மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு

Date:

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அத்துடன் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இடைக்கால இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் கோரிய போதிலும், உத்தரவைப் பிறப்பிக்காத மேல் நீதிமன்றம், பிரதிவாதியான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை மாத்திரம் விடுப்பதாக தெரிவித்துள்ளது.

சந்தேகநபரான ராஜித சேனாரத்னவிற்கு நாளை (29) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணைக்கு அமைய நாளை அவர் கட்டாயம் அந்த நீதிமன்றில் முன்னிலையாவார் என சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.

பின்னர் மனுவை செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க திகதியிடப்பட்டது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...