மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

Date:

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியமையினால் அதனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வகையில் தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கடந்த காலங்களைப்போல் நாடளாவிய ரீதியில் உள்ள பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள், அஹதிய்யா பாடசாலைகள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்கள் என்பனவற்றினூடாக பின்வரும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வது சிறப்பாக அமையும் எனவும்  அவற்றை முடியுமானவரை செய்யுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்   கேட்டுக் கொண்டுள்ளது.

01. நபி (ஸல்) அவர்கள் பற்றி முன்மாதிரிகள் தொடர்பான கருத்தரங்குகள், பயான் நிகழ்வுகள் மற்றும் இதுபோன்ற ஏனைய நிகழ்வுகளை நடாத்துதல்,

02. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மதஸ்தளங்கள் உள்ளிட்ட பொதுவான இடங்களில் மரக் கன்றுகளை நடுதல் மற்றும் சிரமதான நிகழ்வுகளை மேற்கொள்ளல்.

03 . தேசிய இரத்த வங்கிக்கு உதவும் வகையில் இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்.

04. தேவையுடைய ஏழைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் சமைத்த உணவுகளை வழங்குதல்.

நபி (ஸல்) அவர்களது முன்மாதிரிகளுடன் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்   கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

காசா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

காசா பகுதியில் மிகப் பெரிய நகரான காசா சிட்டியில் பஞ்ச நிலை...

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில்...

நாட்டின் சில பகுதிகளில் மாலையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று சனிக்கிழமை...