ரணிலின் உடல் நிலை அறிக்கை;தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லனவுக்கு ஒழுக்காற்று விசாரணை

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர், மருத்துவர் ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் உடல் நிலைமை மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தகவல்களை பொதுவாகஊடகங்களுக்கு வழங்குவதில்லை என அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு செயற்படுவதில் ஒழுக்கம் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுவதாகவும் பிரதி சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவத்துடன், நோயாளியின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதனை ஊடகங்கள் அவ்வாறே வெளியிட்டுள்ளதுடன், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பிரதி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, அது ஒழுக்க விதிமுறைகளை மீறும் செயற்பாடு எனவும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...