விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு இரண்டு மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மருத்துவ மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போது கைதுசெய்யப்பட்டார்.