ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி சென்றிருந்ததாக வெளியான செய்திகள் போலியானது!

Date:

வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய சென்றிருந்ததாக வெளியான செய்திகள் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஊடகப் பிரிவு, இது போலியான செய்தி என்பதை   உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (24) அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றதாக  சிங்கள பிரதான ஊடகமான ‘ஹிரு’ செய்தி வெளியிட்டிருந்தது.

அதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணிலின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுடன் பிரதமர் வந்திருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல், அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்து எமது ஊடகம் பிரதமர் ஹரிணியின் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டதையடுத்து அது போலியான செய்தி என உறுதிப்படுத்தப்பட்டது.

Popular

More like this
Related

கத்தாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கத்தார் இராச்சியத்தில் பணியிலிருந்த போது உயிரிழந்த இலங்கையர்களான இழப்பீட்டை அங்குள்ள இலங்கை...

இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில் இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில்

இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில் மாத்திரம் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு...

இன்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு இன்றைய தினமும்...

புத்தளம் மாவட்ட வெள்ளத் தடுப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக சீனப் பொறியியலாளர்கள் விசேட கலந்துரையாடல்.

அண்மையில் டிட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்...