நாட்டில் சில இடங்களில் மழைக்கான சாத்தியம்!

Date:

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தீவின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காற்று மேற்கு முதல் தென்மேற்கு திசை வரை வீசும், காற்றின் வேகம் மணிக்கு (25-35) கி.மீ. வரை இருக்கும்.

புத்தளம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு (50-55) கி.மீ. வரை அதிகரிக்கலாம்.

புத்தளம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகக் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும்...

ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது  பெரும்பாலும் சாத்தியமில்லை: சிறைச்சாலைகள் ஆணையாளர்

தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் வெளியீடு!

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட க.பொ.த (உயர்தர) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில்...