ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 1990 ஆகஸ்ட் 12ஆம் திகதி இடம்பெற்ற படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 121 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துயரச் சம்பவம் இலங்கை வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனங்களில் ஆறாத காயமாகவும் இருந்து வருகிறது. புலிகளின் இந்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அரசியல் சமூக தலைவர்கள் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
அதேநேரம் “அல்லாஹ் அந்த ஷுஹதாக்களை பொருந்திக் கொள்ளட்டும்; அவர்களுக்கு சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்கட்டும்” என கலாநிதி எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.