‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

Date:

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி நடைபோடும் Amazon College & Campus வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம் என்பதற்கான விருதை Business Global International Award Organisation (BGIA) என்ற அமைப்பினால் 2025 ஜூலை மாதம் 26 ஆம் திகதி விளையாட்டு அமைச்சின் பிரதான காரியாலயத்தில் பெற்றுக்கொண்டது.

Amazon உயர் கல்வி நிறுவனமானது கல்வி அமைச்சின் கீழ் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவில் பதியப்பட்ட நிறுவனமாக இயங்கிவரும் அதேவேளை உள்நாட்டு வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மிக சிறப்பாக செயற்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இலங்கை மாணவர்களுக்கு உள்நாட்டிலேயே உயர் பட்டப்படிப்பை தொடருவதற்கான வாய்ப்புக்களையும் amazon college வழங்கி வருகிறது.

Diploma முதல் HND Degree வரையிலான பட்டங்களை பல துறைகளில் வழங்கியுள்ள இந்நிறுவனம், இன்று வரை தனது உயர் கல்வி சேவைகளுக்காக 6 விருதுகளை சொந்தமாக்கிக் கொண்டுள்ளது என Amazon College & Campus உயர் கல்வி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...