குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் முன்நிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.