வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

Date:

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி சுய போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று தொடக்கம் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் சுய போக்குவரத்திற்கான சாரதி அனுமதி பத்திரங்களை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வருகைதரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் வாடகை வாகனங்களை கொள்வனவு செய்து, அவர்கள் சுற்றுலா செல்வதாகவும்
இதற்காக பெரும்பாலும் மோட்டார் சைக்கிள்கள் அல்லது முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய முறைமையின் கீழ் இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கான சாரதி அனுமதி பத்திரம் மாத்திரமே வழங்கப்படும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான அனுமதி பத்திரம் வழங்கப்படமாட்டாது எனவும் வாகன போக்குவரத்து திணைக்களம் திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும்...

அமைச்சர் விஜித ஹேரத் சவூதி பயணம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்...

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: பாராளுமன்றில் ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அதற்காக...

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...