கடந்த ஏழு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக மொத்தம் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், அந்தக் காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
இதன்போது, உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு வெளிநாடு வேலைவாய்ப்பு நிறுவனங்களுடன் தொடர்புடைய ஏழு நபர்கள் உட்பட மொத்தம் 36 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.