குளியாப்பிட்டிய விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

Date:

குளியாப்பிட்டிய பகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும்,

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியும் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குளியாப்பிட்டிய, பல்லேவெல, விலபொல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் இரு பாடசாலை மாணவர்களும், வேன் சாரதியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்தில் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியங்கள் நீக்கப்படாது:சட்டமா அதிபர்

ஜனாதிபதி உரித்துரிமைகள் தொடர்பாக முன்மொழியப்பட்ட பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய...

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக்கணக்குகளுக்கு..!

70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

இலங்கையின் நான்காவது பெரிய மனித புதைகுழி கொழும்பில்!

கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில்...