Update ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

Date:

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆஜரானதை தொடர்ந்து அவரை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்துமாறும் அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையையடுத்து, கொழும்பு பிரதான நீதவான் கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இதற்கிடையில் ராஜிதவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திருத்தி ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (28) தீர்மானித்தது.

Popular

More like this
Related

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...