இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி: வான்வழி மூடல்; கப்பல்கள் செல்லத் தடை!

Date:

இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இஸ்ரேலின் போர் விமானங்கள் துருக்கியின் வான்வெளி பரப்பு மற்றும் துறைமுகங்களை பயன்படுத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பின் பின்னணி காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை தான் முக்கிய காரணமாகும்.

பலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போருக்கு துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தொடக்கத்தில் இருந்தே துருக்கி ஜனாதிபதி அர்தூகான்  இஸ்ரேலை கடுமையாக கண்டித்தார். அதுமட்டுமின்றி காசாவில் இனப்படுகொலையை இஸ்ரேல் செய்வதாக சாடினார்.

ஆனால் இஸ்ரேல் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. காசாவிற்காக துருக்கி சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட மருத்துவமனையை குண்டு வீசி அழித்தது. இது துருக்கியை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. அதோடு இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று துருக்கி கேட்டது. இருப்பினும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துவிட்டார்.

இந்நிலையில், தான் இஸ்ரேலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் துருக்கி சார்பில் அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துருக்கி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹகன் ஃபிடன் கூறியதாவது:

‛‛மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் முழு பிராந்தியமும் மோதலில் மூழ்க கூடும். இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகள் இஸ்ரேலை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்.

இஸ்ரேல் உடனான வர்த்தகம் மற்றும் அனைத்து பொருளாதார தொடர்புடைகளும் துண்டித்துள்ளோம். இஸ்ரேலின் விமானங்கள் துருக்கி வான்வெளி பரப்பை பயன்படுத்தவும், இஸ்ரேல் கப்பல்கள் துருக்கியின் துறைமுகத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் துருக்கி கப்பல்கள் இஸ்ரேல் துறைமுகத்துக்கு செல்லாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பேராசிரியர் டாக்டர் அப்துல் ரவூப் முகமது ஜியாவுல் ஹசனுக்கு, ஆண்டின் சிறந்த விவசாய கண்டுபிடிப்பாளர் விருது!

வேளாண் அறிவியல் மற்றும் கால்நடை மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புகளுக்கான ஒரு மைல்கல்...

சில புதிய முகங்களுடன் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுக்கான நிர்வாகம் தெரிவு

2025 ஆகஸ்ட் 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின்...

“எதிர்பார்க்கப்பட்டது போலவே” அஷ்ஷைக். றிஸ்வி முப்தி மீண்டும் தலைவராக தெரிவு!!

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி...

இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குவது நமது கடமையாகும்: அஷ்ஷைக். யூஸுப் முப்தியின் அறைகூவல்!

நமது நாட்டின் மதிப்பிற்குரிய மூத்த அறிஞர்களுக்கும் இளம் அறிஞர்களுக்கும் ஒரு செய்தி. உலகங்களின்...