இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

Date:

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன  தலைமையில்  வியாழக்கிழமை (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்தத் தெரிவு இடம்பெற்றது.

சவூதி அரேபியாவின் இலங்கைக்கான  தூதுவர் காலித் ஹமூத் நாஸர் அல்கஹ்தானி இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அத்துடன், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராக இதன்போது தெரிவுசெய்யப்பட்டார்.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை சுட்டிக்காட்டியதுடன், இலங்கையின் அபிவிருத்திப் பயணத்தில் சவூதி அரேபியா ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருவதாகத் தெரிவித்தார்.

நீர், வலுசக்தி, சுகாதாரம், நீதி மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சவுதி அரேபிய நிதியத்தின் ஊடாக சவூதி அரேபியா மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அவர் பாராட்டியதுடன், அவை இலங்கை மக்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சவூதி அபிவிருத்தி நிதியத்துடன் அண்மையில் மேற்கொண்ட ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாஸர் அல்கஹ்தானி, அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர மரியாதை மற்றும் வினைத்திறனான ஒத்துழைப்பின் அடிப்படையிலான சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல தசாப்த கால உறவுகளை சுட்டிக்காட்டினார்.

அண்மைய ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுவடைந்து வருவதாகத் தெரிவித்த அவர், பாராளுமன்றங்களுக்கிடையிலான உயர்ந்த கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான பாலமாக நட்புறவுச்சங்கம் செயல்படும் என்பதை வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...