1. முஸ்லிம் விவாக – விவாகரத்து தொடர்பாக வருடக் கணக்கில் தீர்வு காணப்படாதிருக்கும் சர்ச்சைக்கு தீர்வாக ஒருமித்த ஆவணத்தை தயாரிப்பது
2. சுங்கத் திணைக்களத்தில் விடுவிக்கப்படாமலிருக்கும் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகள் தொடர்பாக தீர்க்கமான முடிவுக்கு வருவது
3. சிலரால் எழுதப்பட்ட இஸ்லாமிய நூல்கள் உள்நாட்டுக்கு வரக்கூடாது என்று அரசாங்கத்தைக் கோரும் கடிதமொன்றை ஜம்இய்யாவில் அங்கம் வகிக்கும் சிலர் உட்பட எட்டுப் பேர் கையொப்பமிட்டு அரசாங்கத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள்.அது முஸ்லிம்களுக்கு மத்தியில் சர்ச்சையாக இருப்பதால் அது விடயமாக தீர்க்கமான முடிவுக்கு வருவது.
4. அரபு மத்ரஸாக்களுக்காகான ஒருமித்த பாட விதானம் ஒன்றுக்கான முன்மொழிவுகளை ஏற்கனவே நிபுணர்கள் குழுவொன்று முன்வைத்துள்ளது.அக்குழுவின் பணிகள் தொடரவில்லை.எனவே அதனை தொடர்வதற்கான முயற்சிகளைச் செய்வது.