இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை செல்வதை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பதற்கு புத்தசாசன , மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனெவி முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
பல தசாப்தங்களாக, இலங்கை பக்தர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 1 முதல் ஜனவரி 31 வரையான காலப்பகுதியில் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வழபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யாத்திரை ஆண்டு தோறும் 15,000 க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்களை ஈர்க்கிறது.
அமைச்சரவையின் இந்த அங்கீகாரத்தை அடுத்து , இலங்கை அரசாங்கம் சபரிமலை யாத்திரையை முறையாக அங்கீகரித்து அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கும்.