இலங்கையின் சிறந்த படைப்பாற்றல் மிக்க விளம்பரப் பிரச்சாரங்களைக் கௌரவிக்கும் TikTok Ad Awards 2025

Date:

TikTok நிறுவனம் METAP (மத்திய கிழக்கு, துருக்கி, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் தெற்காசியா) பிராந்தியத்தில் TikTok விளம்பர விருதுகளை (TikTok Ad Awards 2025) மீண்டும் நடத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான விருது விழா 2025 டிசம்பரில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ளது. இந்த விருதுகள் TikTok தளத்தின் தனித்துவத்தை பயன்படுத்தி சிறந்த விளம்பர அனுபவங்களை வழங்கும் படைப்பாற்றல் மிக்க வர்த்தகநாமங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களை கௌரவிக்கின்றன.

இந்நிகழ்வு பிராந்தியத்தின் டிஜிட்டல் விளம்பரத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டின் முதல் பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து, 2025 TikTok விளம்பர விருதுகள் பிராந்தியம் முழுவதிலிருந்தும் சிறந்த விளம்பரப் பிரச்சாரங்களை மீண்டும் கௌரவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள், TikTok தளத்தில் உண்மைத்தன்மை, படைப்பாற்றல் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அதே நேரத்தில் சிறந்த வணிக வெற்றிகளையும் அடைந்த வர்த்தகநாமங்களின் பிரச்சாரங்களை அங்கீகரிக்கும். இந்நிகழ்வின் நோக்கம் விளம்பரத் துறையில் தனித்துவமான திறமை, புத்தாக்க படைப்பு மற்றும் சமூகத் தாக்கத்தை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 18 முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இலங்கை,
பங்களாதேஷ், பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கத்தார், லெபனான், ஈராக், எகிப்து, துருக்கி, மொராக்கோ, கென்யா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், அசர்பைஜான் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் உள்ள வர்த்தகநாமங்கள் மற்றும் விளமப்ர நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்கலாம். விருதுக்கு தகுதி பெற, பிரச்சாரங்கள் 2024 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 2025 ஒக்டோபர் 31ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் TikTok தளத்தில் இயங்கியிருக்க வேண்டும்.

அதேபோல, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் 2025 ஒக்டோபர் 31ஆம் திகதி நிறைவடையும். இது பங்கேற்க விரும்புவோருக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள போதுமான கால அவகாசத்தை வழங்குகிறது.

இவ்விருகள் தொடர்பில் TikTok இன் மத்திய கிழக்கு, துருக்கி, ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்காசியாவின் உலகளாவிய வணிகத் தீர்வுகளின் பொது முகாமையாளர் Shadi Kandil கருத்து தெரிவிக்கையில், “கடந்த ஆண்டு நாங்கள் கண்ட நம்பமுடியாத படைப்பாற்றலுக்குப் பின்னர், 2025 ஆம் ஆண்டிற்கான TikTok விளம்பர விருதுகளை ரியாத்திற்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த விருதுகள் விளம்பரத்திற்கு அப்பாற்பட்டு கலாச்சார தருணங்களை உருவாக்கி, மகிழ்ச்சியை ஊக்குவித்து, உறுதியான வெற்றிகளை ஏற்படுத்தும் படைப்புகளை கௌரவிப்பதைப் பற்றியவை. METAP பகுதி முழுவதிலும் உள்ள வர்த்தகநாமங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் இந்த ஆண்டு வெளிப்படுத்தும் துணிச்சலான மற்றும் புத்தாக்க படைப்புகளைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என தெரிவித்தார்.

இந்த ஆண்டிற்கான விருதுகள் 9 பிரிவின் கீழ் வழங்கப்படும். அவையாவை:

  1. 1. it’s the Creative for Me: TikTok-இல் மட்டுமே வெளியிடப்பட்ட மிகவும் படைப்பாற்றல் மிக்க மற்றும் அதிக பயனர்களை ஈர்த்த படைப்பு யோசனை

2 Community Core: ஈடுபாடு மற்றும் தாக்கத்திற்காக படைப்பாளிகள் மற்றும் சமூகத்தால் உருவாக்கப்பட்ட சிறப்பு கூட்டாண்மைகளை பாராட்டுதல்.

  1. 3. Full Funnel Flex: முழுமையான சந்தைப்படுத்தல் மூலம் சிறந்த முடிவுகளை வழங்கும் ஒருங்கிணைந்த உத்திகளை பாராட்டுதல்.
  2. Big Branding Energy: தனித்துவமான வர்த்தகநாமங்களை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டுவர செயல்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கதைகள் மற்றும் உத்திகளை பாராட்டுதல்
  3. Goal Digger: மாற்றத்திலிருந்து விற்பனை வரை குறைந்தபட்ச செயல்திறன் மூலம் சிறப்பை அடைந்த வணிகம்
  4. Bougie on a Budget: நவீன உற்பத்தி செலவுகளைப் பயன்படுத்தி அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வணிகம்
  5. Sound On Please: இசை, குரல் அல்லது விளைவுகளை புதுமையான மற்றும் மறக்க முடியாத வகையில் பயன்படுத்தி கதைகளை முன்வைப்பதை மையமாகக் கொண்ட வணிகம்
  6. The People’s Choice: சிறந்த வணிகத்திற்காக விழாவில் வழங்கப்படும் விருப்ப வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெறும் வணிகம்
  7. The highest accolade: இது தவிர, படைப்பாற்றல் சிறப்பு, செயல்திறன் மற்றும் இலக்குகளை அடைவதை நிரூபிக்கும் சிறந்த படைப்பு பிரச்சாரத்திற்காக The Greatest Of All Time (The G.O.A.T) விருதும் இங்கு வழங்கப்படும்.

வர்த்தகநாமங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் முழுமையான நிகழ்ச்சி விபரங்களைப் பெறவும், தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்கவும் https://tiktokadawardsmetapee.com/2025 என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

வெற்றியாளர்கள் ரியாத்தில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்படுவார்கள். இந்த விருது வழங்கும் விழா, படைப்பாற்றல் மற்றும் தொழில்முறை உறவுகளை வளர்க்கும் சிறப்பு நிகழ்வாக அமையும்.

TikTok விளம்பர விருதுகள் METAP 2025 பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு, https://tiktokadawardsmetapee.com/2025 இணையதளத்தை பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு செப்டம்பரில் நிறைவு!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட...

ராஜிதவின் மனு அடுத்த மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம்...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக விசேட நீதிமன்றம் நிறுவப்படும்: பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும்...

ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்...