சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Date:

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு திசைகளிலிருந்து வீசக் கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ. வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...