நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொதுமக்கள் அனைவரும் 071- 8598888 என்ற வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட முடியும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக காணொளிகள் அல்லது புகைப்படங்கள் தொடர்பான முறைப்பாடுகளையும் அளிக்க முடியும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.