பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

Date:

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல் இந்தியா மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை க நினைவூட்டும் வகையில் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் இன்று (05) அனுஷ்டிக்கப்பட்டது.

முக்கியப் பேச்சாளர்கள் காஷ்மீரிகளின் அவல நிலையைப் சுட்டிக்காட்டியதோடு இந்த சர்ச்சையானது ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் உள்ள பழமையான விஷயங்களில் ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, இந்தியா தனது உறுதிமொழிகளை மதிக்க மறுப்பதாலும், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்காததாலும் இந்த சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.

மனிதாபிமானமற்ற இராணுவ முற்றுகை, தகவல் தொடர்பு முற்றுகை, சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், போலி என்கவுன்டர்கள் மூலம் அப்பாவி காஷ்மீரிகள் மீதான அடக்குமுறை மற்றும் மிருகத்தனமான தாக்குதலை உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அஸீஸ் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

மேலும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் முகமது ஷேபாஸ் ஷெரீப், வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் ஆகியோரின் இந்நாள் குறித்த செய்திகளும் வாசிக்கப்பட்டன.

Popular

More like this
Related

சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்

சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...

இஸ்லாமிய வீரர்களுக்காக சில மாற்றங்களை செய்த FIFA: பீர் நிறுவனத்தின் லோகோக்கள் நீக்கம்.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும்...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...