இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியமையினால் அதனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில் தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கடந்த காலங்களைப்போல் நாடளாவிய ரீதியில் உள்ள பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள், அஹதிய்யா பாடசாலைகள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்கள் என்பனவற்றினூடாக பின்வரும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வது சிறப்பாக அமையும் எனவும் அவற்றை முடியுமானவரை செய்யுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
01. நபி (ஸல்) அவர்கள் பற்றி முன்மாதிரிகள் தொடர்பான கருத்தரங்குகள், பயான் நிகழ்வுகள் மற்றும் இதுபோன்ற ஏனைய நிகழ்வுகளை நடாத்துதல்,
02. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மதஸ்தளங்கள் உள்ளிட்ட பொதுவான இடங்களில் மரக் கன்றுகளை நடுதல் மற்றும் சிரமதான நிகழ்வுகளை மேற்கொள்ளல்.
03 . தேசிய இரத்த வங்கிக்கு உதவும் வகையில் இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்.
04. தேவையுடைய ஏழைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் சமைத்த உணவுகளை வழங்குதல்.
நபி (ஸல்) அவர்களது முன்மாதிரிகளுடன் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.