யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 288 யானைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன.
அதேநேரம், 2020 முதல் 2024 வரை, 2,000க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன.
வேட்டையாடுதல், தொடருந்து மோதல்கள் மற்றும் மனித-யானை மோதல் காரணமாகவே யானைகளின் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.
பெரும்பாலும் யானைகளின் தந்தங்களைப் பெற்று அதிக விலையில் விற்பனை செய்யும் நோக்கத்துடனேயே யானைகள் கொல்லப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது