ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், கோரிக்கை.

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்புக்காவலில் இருக்கும் போது அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்தநிலையில் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்கக் கோரும் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தலைவர்களுடன் தானும் இணைவதாக சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது, இலங்கையைக் காப்பாற்ற நின்ற தலைவர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் தகுதியற்றது.

உண்மையாக இருந்தாலும், அவை ஐரோப்பாவின் எந்தவொரு குற்றவியல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கும் சமமாகாது என்றும் கூறினார்.

இலங்கையின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கும் அதே வேளையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தொடர்வதை விட “உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த” அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...