பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய நினைவுப் பேருரையும், நூல் வெளியீடும் இன்று மாலை 4.00 மணிக்கு புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம், நாகவில்லு, பாலாவி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எஸ்.எம். ஹுசைமத் (BA) அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பல்வேறு கல்வியாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.
பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களின் கல்விச்சேவைகள், சமூக பங்களிப்புகள் மற்றும் ஆராய்ச்சி துறையில் செய்த பணிகள் குறித்து இந்நிகழ்வில் விரிவாக உரைநிகழ்த்தப்படவுள்ளது.