கத்தாா் தலைநகா் தோஹாவில் அரபு – இஸ்லாமிய தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து தோஹாவுக்கு தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை (செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
தோஹாவில் ஹமாஸ் தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை ஈட்டித் தந்துள்ளது.