இஸ்லாமோபோபியா மூலம் அரபு முஸ்லிம் நாடுகளின் பிம்பத்தை சிதைக்க முயற்சிக்கும் காலம் வரைக்கும் அமைதியை யோ பாதுகாப்பையோ அடைய முடியாது – அரபு உச்சி மாநாடு எச்சரிக்கை

Date:

தோஹாவில் நடைபெற்ற அவசர உச்சிமாநாட்டில் கூடிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் அரபு லீக்கின் தலைவர்கள், இஸ்ரேல் சமீபத்தில் கத்தார் மீது மேற்கொண்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகவும் பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் கடுமையாகன கண்டனத்தை வெளியிட்டனர்.

திங்களன்று கூட்டத்திற்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில் கத்தாரை தமது சகோதர நாடு என்பதை வலியுறுத்திய அரபு இஸ்லாமியத் தலைவர்கள் கத்தார் நாட்டவருடனான தமது முழுமையான நட்புறவையும் வெளிப்படுத்தினர், தோஹாவில் குடியிருப்புப் பகுதிகளில் செப்டம்பர் 9 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில், கத்தார் நாட்டவர் உட்பட பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இது “ஒரு கோழைத்தனமானதும் சட்டவிரோதமானதுமான தாக்குதல்” என்று வர்ணித்த மாநாடு, இது மத்தியஸ்த பிரதிநிதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகள், இராஜதந்திர அலுவலகங்கள், வாசஸ்தலங்களையும் குறிவைத்ததாகவும் சுட்டிக் காட்டினர்.

இந்த தாக்குதல் கத்தாருக்கு எதிரான ஆக்கிரமிப்பு மட்டுமல்ல, “அனைத்து அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் மீதான தாக்குதல்” என்றும் உச்சிமாநாடு பிரகடனப்படுத்தியது.

காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் பரிமாற்றப் பேச்சுவார்த்தைகளில் கத்தார் வகிக்கின்ற முக்கிய மத்தியஸ்த பாத்திரத்தை இஸ்ரேல் குறைத்து மதிப்பிட முயற்சிப்பதாகவும் மாநாடு குற்றம் சாட்டியது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் அரபு லீக்கின் தலைவர்கள்,கத்தாரின் இறைமை மற்றும் பாதுகாப்பிற்கான தங்கள் ஆதரவை நேற்று மீண்டும் உறுதிப்படுத்திய அதே வேளை, காசாவில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அழைப்புகளையும் மீளவும் வலியறுத்தினர்.

மேலும் போர்க்குற்றங்கள், முற்றுகைகள் மற்றும் சட்டவிரோத குடியிருப்பு தீர்வு விரிவாக்கத்திற்கு இஸ்ரேலை பொறுப்பேற்கச் செய்வதற்கு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியது.

பலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளைத் தொடராமல் தடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது தடைகளை விதித்தல், ஆயுதங்களையும் யுத்த தளபாடங்களையும் வழங்குவதை நிறுத்துதல் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குதல் உள்ளிட்ட அனைத்து சாத்தியமான சட்ட நடவடிக்கைகளையும் ஏனைய பயனுள்ள நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உச்சி மாநாடு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலின் உறுப்புரிமையை மீளாய்வு செய்யுமாறும், ஐ.நா. தீர்மானங்களை தொடர்ச்சியாக மீறுவதை முன்வைத்து அதன் உறுப்பு நிலையை இடைநிறுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறும் OIC உறுப்பு நாடுகளை அது வலியுறுத்தியது.

சர்வதேச சட்டங்களையும் ஐ.நா. தீர்மானங்களையும் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை மாநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவாக்குதல் மற்றும் இன அழிப்புத் திட்டங்களைத் தொடரும் வரையிலும், இஸ்லாமோபோபியா மூலம் அரபு முஸ்லிம் நாடுகளின் பிம்பத்தை சிதைக்க முயற்சிக்கும் வரையிலும் அமைதியையோ பாதுகாப்பையோ அடைய முடியாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பலஸ்தீன மக்களுக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணைகளை நடைமுறைப்படுத்துவதற்கு துணைபுரியும் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ரோம் சட்டத்தின் தரப்பினர் என்ற வகையில் OIC நாடுகள் வற்புறுத்தின.

மேலும், காசாவில் நடக்கும் இனப்படுகொலை தொடர்பான வழக்கில் ஜனவரி 2024 இல் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட தற்காலிக நடவடிக்கைகள் உட்பட, நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளுக்கு இஸ்ரேல் இணங்குவதை உறுதிசெய்வதற்கு இராஜதந்திர, அரசியல் மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளை முன்னெடுக்குமாறு உறுப்பு நாடுகளை மாநாடு வேண்டிக் கொண்டது,

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசஸமை தலைநகராகக் கொண்ட பலஸ்தீன அரசுக்கான பரந்த அங்கீகாரத்தின் ஒரு படியாக, சவுதி அரேபியா மற்றும் பிரான்சின் கூட்டுத் தலைமையில் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் இரு-நாட்டுத் தீர்வு மாநாட்டை உச்சிமாநாடு வரவேற்றது.

தாக்குதலை எதிர்கொள்வதில் அதன் “புத்திசாலித்தனமான மற்றும் பொறுப்பான நிலைப்பாட்டிற்காக” கத்தாரின் தலைமையை உச்சி மாநாடு பாராட்டியது. அரபு அல்லது முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக இஸ்ரேலால் இனியும் அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுமானால் , சர்வதேச ரீதியாகப் பலமாகப் பதிலளிக்க வேண்டிய ஆபத்தாக அது மாறும் என்று உச்சிமாநாடு எச்சரிகை விடுத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி:கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 9 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும்...

GovPay உடன் முழுமையாக இணைந்த இலங்கையின் முதல் மாகாணமாக தென் மாகாணம்

தென் மாகாணத்தின் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களும் இனி GovPay...