ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி 150 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.